/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கையிழந்த மாணவன் குடும்பத்திற்கு கனவு இல்ல வீடு கட்ட ஆணை
/
கையிழந்த மாணவன் குடும்பத்திற்கு கனவு இல்ல வீடு கட்ட ஆணை
கையிழந்த மாணவன் குடும்பத்திற்கு கனவு இல்ல வீடு கட்ட ஆணை
கையிழந்த மாணவன் குடும்பத்திற்கு கனவு இல்ல வீடு கட்ட ஆணை
ADDED : ஜூலை 17, 2025 01:16 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாலுகா ஜீனுார் கிராமத்தை சேர்ந்த, இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி மாணவன் கீர்த்திவர்மன். பிளஸ் 2 தேர்வில், 471 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. மேலும், இம்மாணவன் வீட்டிலிருந்து படிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்ததால், தற்போது சென்னையில் சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லுாரியில் கணினி பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவன் கீர்த்திவர்மன் குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு இல்லாததால், தற்போது அவர்கள் வசித்து வரும், ஜீனுார் கிராமத்திலேயே கனவு இல்லம் திட்டத்தில், வீடு கட்டுவதற்கான ஆணையை, நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி, பணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தாசில்தார் சின்னசாமி உடனிருந்தனர்.