/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷனில் மீத கரும்புகளை விற்று பணத்தை ஒப்படைக்க உத்தரவு
/
ரேஷனில் மீத கரும்புகளை விற்று பணத்தை ஒப்படைக்க உத்தரவு
ரேஷனில் மீத கரும்புகளை விற்று பணத்தை ஒப்படைக்க உத்தரவு
ரேஷனில் மீத கரும்புகளை விற்று பணத்தை ஒப்படைக்க உத்தரவு
ADDED : ஜன 15, 2024 11:23 AM
கிருஷ்ணகிரி: ரேஷன்கடைகளில் மீதமுள்ள கரும்புகளை விற்று, பணத்தை சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற அதிகாரிகளின் உத்தரவால், ரேஷன் கடை ஊழியர்கள் மன
வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,094 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம், 5.62 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும், 1,000 ரூபாய் அடங்கிய பொங்கல் தொகுப்பை கடந்த, 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை முடியும் வரை விடுமுறை வழங்கவில்லை. இந்நிலையில், ரேஷன் கடைகளில் மீதமுள்ள கரும்புகளை விற்று பணத்தை வழங்க வேண்டுமென, அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விற்பனையாளர்களுக்கு, அதிகாரிகள் அனுப்பியுள்ள, 'வாட்ஸாப்' தகவலில், 'விற்பனையாளர்கள் கவனத்திற்கு, இணைப்பதிவாளர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகளின் படி, நாளை (நேற்று) மாலை, 6:00 மணியுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் முடிவடையும்.
விற்பனையாளர் தங்களிடம் மீதமுள்ள தொகையை மாலை, 6:00 மணிக்கு சங்க செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தங்களிடம் மீதமுள்ள கரும்புகளை அரசு குறிப்பிட்ட தொகைக்கு சந்தைகளில் விற்பனை செய்து, அந்த பணத்தை சங்கத்தில் செலுத்த வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நேற்று வேலை நாள் என்பதால், அதற்கு பதிலாக நாளை (ஜன.16) ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பும் வந்துள்ளது. 16ல் ஏற்கனவே அரசு விடுமுறை உள்ளபோது, மீண்டும் எப்படி விடுமுறை விட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே, விடுமுறை இன்றி தவிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள், மீதமுள்ள கரும்புகளை விற்பனை செய்து, பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அறிவிப்பால், மனவேதனை அடைந்துள்ளனர்.