/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : டிச 05, 2024 07:12 AM
தர்மபுரி: தர்மபுரி ஒன்றியத்தில் நடந்து வரும், வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து,
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.தர்மபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் பஞ்.,ல் துவக்கப்பள்ளி பள்ளி கட்டடம், கழிவறை, குடிநீர் மற்றும்
மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து, கலெக்டர் சாந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதில், பழைய
வகுப்பறை கட்டடங்களை அகற்றி விட்டு, புதிய வகுப்பறை கட்டடங்களை கட்ட சம்பந்தப்-பட்ட
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கிருஷ்ண-புரம் பஞ்., மாவடிப்பட்டியில் கழிவுநீர் கால்வாய்
அமைக்கும் பணி, நத்தம் காலனியில் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தபின், வளர்ச்சி பணிகளை
விரைந்து முடிக்க அதிகா-ரிகளுக்கு அறிவுறுத்தினார். இதில், தர்மபுரி பி.டி.ஓ.,க்கள் கலை-வாணி, சத்யா, உதவி
பொறியாளர்கள் சீனிவாசன், சுமதி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.