/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
/
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : மே 15, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, திருப்பத்துாரில் சாலை விபத்தில் படுகாயமடைந்த பெண்ணிற்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து, அவரது உடல் உறுப்புகள், தானமாக பெறப்பட்டன.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ஜோதி, 42. இவரது கணவர் பாலகிருஷ்ணன். திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் தற்காலிக சுகாதார பணியாளராக பணிபுரிகிறார். ஜோதி கடந்த, 11ல் திருப்பத்துார் அருகே ஸ்கூட்டியில் சென்றபோது விபத்து ஏற்பட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் கடந்த, 12ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோதிக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க, ஜோதியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் அவரது ஒரு கிட்னி, ஈரோடு அபிராமி கிட்னி சென்டருக்கும்,
மற்றொரு கிட்னி, சேலம் அரசு மருத்துவமனைக்கும், கண்கள் தர்மபுரி அரசு
மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய ஜோதியின் உடலுக்கு, மருத்துவக்கல்லுாரி முதல்வர் பூவதி தலைமையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் ராஜா, தினேஷ், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டர் மலர் வளையம் வைத்து மரியாதை
செலுத்தினர்.