/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி எருது விடும் விழா; 28 பேர் மீது வழக்கு
/
அனுமதியின்றி எருது விடும் விழா; 28 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி எருது விடும் விழா; 28 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி எருது விடும் விழா; 28 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 06, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : சூளகிரியில், உரிய அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பீர்பள்ளி கிராமத்தில் துவக்கப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் காலை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உரிய அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது.
மேலுமலை வி.ஏ.ஓ., ராமர், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். ஆனால் அவரை பணி செய்ய விடாமல், எருது விடும் விழா நடத்திய சிலர் தடுத்தனர். இதையடுத்து, வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, பீர்பள்ளியை சேர்ந்த சுந்தரேசன், 63, உட்பட, 28 பேர் மீது, சூளகிரி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.