ADDED : நவ 18, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, கூரம்பட்டி, மயில்பாறை பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி, 25, பெயின்டர். இவரின் நண்பர் மாரிகவுண்டன் சவுளூர் பகுதியை சேர்ந்த ரிஷி, 27. இருவரும் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வேலம்பட்டியிலிருந்து வீட்டிற்கு யமஹா பைக்கில் சென்றனர்.
அப்போது டேம்காவா பகுதியில், சாலையின் வளைவில் உள்ள கம்பி முள்வேலியில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், மயில்சாமி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பலியானார். ரிஷி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

