sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஞ்., பணியாளர்கள் பி.டி.ஓ., ஆபீசில் மனு

/

பஞ்., பணியாளர்கள் பி.டி.ஓ., ஆபீசில் மனு

பஞ்., பணியாளர்கள் பி.டி.ஓ., ஆபீசில் மனு

பஞ்., பணியாளர்கள் பி.டி.ஓ., ஆபீசில் மனு


ADDED : பிப் 04, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 04, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து, பொது பணியாளர்கள் சங்கம், ஊராட்சி, பேரூராட்சி, டேங்க் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர், துாய்மை காவலர், உள்ளாட்சி பணியாளர் சம்மே-ளனம் சார்பில், மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நார்த்தம்பட்டி பஞ்., டேங்க் ஆப்பரேட்டராக பணி புரிந்த சரவணன் என்பவர் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் பணியின் போதே மாரடைப்பால் இறந்து விட்டார். ஆனால், இன்று

வரை இவரின் குடும்நல சேம நிதி உதவி அவரின் குடும்பத்துக்கு வழங்கப்படவில்லை. அதேபோல், மொரப்பூர் பஞ்., துாய்மை பணியாள-ராக பணிபுரிந்த குப்புசாமிக்கும் குடும்பநல

சேமநிதி வழங்க-வில்லை. எனவே, இவர்களின் குடும்பத்துக்கு சேமநல நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க

வேண்டும். 2019 முதல், 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்க

வேண்டும். துாய்மை காவலர்களுக்கு பிரதி மாதம், 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். பஞ்.,

செயலா-ளர்களை விடுமுறை நாட்களில் பணி செய்ய நிர்பந்தப்படுத்து-வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.ஒன்றிய பொறுப்பாளர்கள் சிவக்குமார், அருள்பிரகாஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us