/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஞ்., தலைவர்களுக்கு உணர்திறன் பயிற்சி பட்டறை
/
பஞ்., தலைவர்களுக்கு உணர்திறன் பயிற்சி பட்டறை
ADDED : மார் 13, 2024 02:16 AM
கிருஷ்ணகிரி:சென்னை
சமூகப்பணி கல்லுாரி சமூக நீதி, சமத்துவ மையம் மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இணைந்து,
கிருஷ்ணகிரியில், பஞ்., தலைவர்களுக்கான சமூக நீதி மற்றும்
சமத்துவம் பற்றி ஒருநாள் உணர்திறன் பயிற்சி பட்டறை நேற்று நடந்தது.
மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜலாலுதீன் தலைமை
வகித்தார். தாட்கோ மேலாளர் வேல்முருகன் பேசினார்.
கிருஷ்ணகிரி
பி.டி.ஓ., சரவணன் பயிற்சியை துவக்கி வைத்து, பஞ்.,த்துகளில் செயல்படும்
செயல்பாடுகள் குறித்தும், பஞ்., தலைவர்களுக்கான திட்டங்கள், நிதி
ஆதாரங்கள் பற்றி விளக்கமாக கூறினார். சமூக நீதி மற்றும் சமத்துவம்
பற்றிய கருத்துறையை, சென்னை சமூக நலம் மற்றும் சமத்துவ மைய உதவி
பேராசிரியர் மற்றும் நிரல் ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி ஸ்டீபன்
விளக்கினார்.
வி.டி.டி., தொண்டு நிறுவன இயக்குனர் வெங்கடேஷ் நன்றி
கூறினார். இதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும்
வேப்பனஹள்ளியை சேர்ந்த பஞ்., தலைவர்கள்
பங்கேற்றனர்.

