/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போக்சோவில் கைதான ஆசிரியரை விடுவிக்க மாணவ, மாணவியருடன் பெற்றோர் தர்ணா
/
போக்சோவில் கைதான ஆசிரியரை விடுவிக்க மாணவ, மாணவியருடன் பெற்றோர் தர்ணா
போக்சோவில் கைதான ஆசிரியரை விடுவிக்க மாணவ, மாணவியருடன் பெற்றோர் தர்ணா
போக்சோவில் கைதான ஆசிரியரை விடுவிக்க மாணவ, மாணவியருடன் பெற்றோர் தர்ணா
ADDED : ஜூலை 30, 2025 02:08 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அருகே, போக்சோவில் கைதான ஆங்கில ஆசிரியரை விடுவிக்கக்கோரி சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியருடன் பெற்றோரும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள நடுநிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர் பாலகிருஷ்ணன், 50. மாணவியர், 3 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த, 23ல் அவரை போக்சோ சட்டத்தில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். நேற்று சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், 28 பேர், பெற்றோர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில்
ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதி நடுநிலைப்பள்ளியில், 80 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த, 10 ஆண்டுகளாக, கழிப்பறையை மாணவர்களுக்கு வழங்காமல், பொதுவெளியில் கழிக்க வைத்தனர். இதை கடந்த ஓராண்டுக்கு முன், பள்ளிக்கு பணிக்கு வந்த ஆசிரியர் பாலகிருஷ்ணன் தட்டி கேட்டார். மாணவ, மாணவியருக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்தார். சத்துணவு முறையாக வழங்குமாறும், முறைகேடுகள் குறித்தும் தட்டி கேட்டார். இதனால் தலைமை ஆசிரியை உட்பட மற்ற ஆசிரியர்கள் அனைவரும், பாலகிருஷ்ணன் மீது பொய்யான புகாரை சுமத்தி, போக்சோ சட்டத்தில் கைது செய்ய வைத்துள்ளனர். அவர் மீது போட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அவரை எங்கள்
பள்ளியிலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அவர்களிடம் போலீசார், 'மாணவர்களாகிய நீங்கள் இதுபோல போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. உங்கள் தரப்பு கருத்துக்களை மனுவாக எழுதி கொடுங்கள். மாவட்ட கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்' எனக்கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர். பின், 4 பேரை மட்டும் அழைத்து சென்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வைத்தனர்.

