/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு ஓராண்டு சிறை: எஸ்.பி.,
/
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு ஓராண்டு சிறை: எஸ்.பி.,
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு ஓராண்டு சிறை: எஸ்.பி.,
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு ஓராண்டு சிறை: எஸ்.பி.,
ADDED : ஜூலை 21, 2025 03:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நகர பகுதியில் அதிக வேகமாகவும், அதிக சத்தத்துடனும் வாகனங்களை இயக்-குகின்றனர். கடந்த சில நாட்களாக சிறுவர்கள் ஓட்டிய வாகனங்-களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் நடந்துள்ளது.
இது குறித்து வந்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவின்படி, போக்குவரத்து எஸ்.ஐ., ஜோதி பிரகாஷ், கிருஷ்ணகிரியில், ஓட்டுனர் உரிமமின்றி டூவீலர்களை இயக்கிய சிறுவர்களை பிடித்து அறிவுரை வழங்கினார். மேலும் டூவீலரின் உரிமையாளர் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ஓட்டுனர் உரிமமின்றி டூவீலர் ஓட்டிய, 15 சிறு-வர்களுக்கு, 5,000 ரூபாய், சிறுவர்கள் டூவீலரை இயக்க அனுமதி அளித்த அவர்களின் பெற்றோருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், பெற்றோர் மீது, 25,000 ரூபாய் அபராதம் விதிப்பதுடன், வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். பெற்றோருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்கும் என, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை
எச்சரித்துள்ளார்.