/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
/
சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
சேதமான அரசு பள்ளியின் கட்டடம் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
ADDED : ஜூன் 03, 2025 01:31 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, கிரியனப்பள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. 65 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் மிகவும் சேதமாகி இருப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி வருகிறது. அதனால், தனியார் கட்டடத்தில் பள்ளி தற்காலிகமாக செயல்படுகிறது. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தர, பெற்றோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், புதிய கட்டடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை முயற்சிக்கவில்லை. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளி திறந்த நிலையில், மாணவ, மாணவியரை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்தனர். கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, வரும் நாட்களில் மாணவ, மாணவியரை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதுடன், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி கொடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.