/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை பகுதியில் கட்சிகொடி கம்பங்கள் அகற்றம்
/
ஊத்தங்கரை பகுதியில் கட்சிகொடி கம்பங்கள் அகற்றம்
ADDED : ஏப் 26, 2025 01:39 AM
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானா, சுற்று வட்டார பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கட்சி கொடி கம்பங்கள், ஜாதி சங்கங்களின் கொடி கம்பங்கள் அனைத்தும் நேற்று அகற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்படி, நெடுஞ்சாலை துறையினர் ஊத்தங்கரை ரவுண்டானாவில் உள்ள அனைத்து கொடி கம்பங்களையும்,
போலீசார் உதவியுடன் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ரவுண்டானாவில் உள்ள தி.மு.க., - பா.ஜ., கொடி கம்பத்தை அகற்றாமல், மற்ற கொடி கம்பங்களை அகற்றியதால், மற்ற கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.
தி.மு.க., கொடி கம்பம் பட்டா இடத்தில் இருப்பதாக நிர்வாகிகள், நெடுஞ்சாலைத்துறை ஏ.இ., நிவேதாவிடம் கூறியுள்ளனர். பட்டாவை காட்டிய பிறகுதான், பா.ஜ., கொடி கம்பத்தை அகற்றுவோம் என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை செய்தனர். இதையடுத்து தி.மு.க., - பா.ஜ., கொடி.கம்பங்கள் மற்றும் திட்டுக்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

