/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அகற்றப்படாத கட்சி கொடி கம்பங்கள்
/
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அகற்றப்படாத கட்சி கொடி கம்பங்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அகற்றப்படாத கட்சி கொடி கம்பங்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அகற்றப்படாத கட்சி கொடி கம்பங்கள்
ADDED : மார் 20, 2024 01:55 AM
போச்சம்பள்ளி:தமிழகத்தில்
ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதனால்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில்
போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டார பகுதிகளில் கொடி கம்பங்கள்,
சுவர் விளம்பரங்களை அகற்ற தேர்தல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்
அலட்சியம் காட்டி வருகின்றனர்.
சந்துார் பஸ் ஸ்டாண்டில்,
அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட் - பா.ம.க., கொடி கம்பங்களும், அதேபோல்
வேடர்தட்டக்கல் பகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கொடி
கம்பங்களும், சந்துார் கூட்ரோடு பகுதியில், தி.மு.க., கொடி கம்பம் என,
போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு
வந்து, 4 நாட்களாகியும், கொடி கம்பங்களை அகற்றாமல், அதிகாரிகள்
அலட்சியம் காட்டி வருகின்றனர்.