/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு டவுன் பஸ்சில் முகப்பு விளக்கு எரியாமல் பயணிகள் ஆபத்து பயணம்
/
அரசு டவுன் பஸ்சில் முகப்பு விளக்கு எரியாமல் பயணிகள் ஆபத்து பயணம்
அரசு டவுன் பஸ்சில் முகப்பு விளக்கு எரியாமல் பயணிகள் ஆபத்து பயணம்
அரசு டவுன் பஸ்சில் முகப்பு விளக்கு எரியாமல் பயணிகள் ஆபத்து பயணம்
ADDED : ஜூன் 09, 2025 03:08 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சிற்குள் விளக்-குகள் எரியாததால் பயணிகள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்கும் எரியாததால், ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர்.
ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு தினமும், 46ம் எண் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஓசூரிலிருந்து புறப்பட்டு, தேன்கனிக்கோட்டைக்கு பஸ் சென்றது. இதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சிற்குள் விளக்குகள் எரியாததால், இருளில் பயணிகள் சிரமப்பட்டனர். கண்டக்டர் மொபைல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் பயணிக-ளுக்கு டிக்கெட் கொடுத்துள்ளார். அத்துடன், பஸ்சின் முன்பகு-தியில் முகப்பு விளக்கில் ஒன்றும் எரியாததால், போதிய வெளிச்ச-மின்றி ஆபத்தான முறையில் பஸ்சை சாலையில் டிரைவர் இயக்கிச் சென்றார்.ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் கடைசி பஸ் என்பதால், பயணிகளும் வேறு வழியின்றி ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொண்டனர். அரசு டவுன் பஸ்கள் சரியாக பராமரிப்பின்றி இயக்கப்படுவதால், தேன்கனிக்கோட்டை - ஓசூர் இடையே பயணிக்கும் பயணிகள் பெரிதும் சிரமப்படு-கின்றனர். ஆனால், பஸ் டிப்போ மேலாளர்கள் எந்த நடவடிக்-கையும் எடுக்காமல் இருப்பதாக, பயணிகள் குற்றம்சாட்டினர்.