/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்
/
மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்
மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்
மாவட்ட கலைத்திருவிழாவில் பேடரப்பள்ளி மாணவி முதலிடம்
ADDED : நவ 21, 2024 01:16 AM
மாவட்ட கலைத்திருவிழாவில்
பேடரப்பள்ளி மாணவி முதலிடம்
ஓசூர், நவ. 21-
ஓசூர், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிணி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த குறுவட்ட, ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்று, மாவட்ட
அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
மாவட்ட அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்ற மாணவி ஹரிணி, தமிழ் ஆத்திச்சூடி போட்டியில், 60 பாடல் வரிகளை கூறி, மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றார். இதன் மூலம் வரும் டிச., மாதம் கோவையில் நடக்கும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
மாணவி ஹரிணியை, தலைமையாசிரியர் பொன்நாகேஷ் மற்றும் மாணவிக்கு பயிற்சியளித்த, 2ம் வகுப்பு ஆசிரியர்கள் எப்சிஜாய்ஸ் மேரி, சாந்தி, அபிராமி மற்றும் மாணவியின் பெற்றோர்களான ஹரிஷ், அர்ச்சனா ஆகியோர் நேற்று, பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

