/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்
/
புகையிலை பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்
ADDED : நவ 10, 2024 01:11 AM
புகையிலை பொருட்கள் விற்ற
10 கடைகளுக்கு அபராதம்
ஓசூர், நவ. 10-
ஓசூர், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தளி சந்தோஷ்குமார், காவேரிப்பட்டணம் அஷ்வினி மற்றும் தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் பட்டு, நாகராஜ் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழுவினர், தேன்கனிக்கோட்டை பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, 10 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரிந்தது. மொத்தம், 8.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை செலுத்தும் வரை, கடைகள் மூடப்படும் என்றனர்.
ஓசூர், கெலமங்கலம் ஒன்றியங்களில் இதுவரை, 86 கடைகளுக்கு, 'சீல்' வைத்துள்ளதாகவும், மொத்தம், 21.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.