/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதிய குறைபாடு விழிப்புணர்வு
/
முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதிய குறைபாடு விழிப்புணர்வு
முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதிய குறைபாடு விழிப்புணர்வு
முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதிய குறைபாடு விழிப்புணர்வு
ADDED : நவ 03, 2024 01:28 AM
கிருஷ்ணகிரி, நவ. 3-
கிருஷ்ணகிரியில் வரும், 6ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு ஓய்வூதியம் குறைபாடுகள் குறித்து, ஸ்பார்ஷ் அவுட்ரீச் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், சென்னை பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டாளரால் ஏற்படுத்தப்பட்டு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரிலுள்ள எஸ்.வி.வி., திருமண மண்டபத்தில் வரும், 6ம் தேதி காலை, 9:00 மணியளவில் நடக்கிறது.
இதில், முன்னாள் படைவீரர்கள், கணவனை இழந்தவர்கள் கலந்து கொண்டு, தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.