/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரையில் ஓய்வூதியர் சங்க 5வது வட்ட மாநாடு
/
ஊத்தங்கரையில் ஓய்வூதியர் சங்க 5வது வட்ட மாநாடு
ADDED : ஜூலை 21, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 5வது வட்டக்கிளை மாநாடு நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம், மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு, வட்ட செயலாளர் ராஜா கண்ணு, இணை செயலாளர் நடராஜன், மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு, தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

