/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜூன் 20ல் ஓய்வூதியர்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம்
/
ஜூன் 20ல் ஓய்வூதியர்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஜூன் 20ல் ஓய்வூதியர்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஜூன் 20ல் ஓய்வூதியர்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ADDED : மே 07, 2025 01:36 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் வரும் ஜூன், 20ல், ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும், ஜூன், 20, காலை 10:00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகிக்கிறார். கூட்டத்திற்கு சென்னை கருவூல கணக்குத்துறை ஓய்வூதிய கூடுதல் இயக்குனர் வருகைத்தர உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள், தங்களது ஓய்வூதியம் தொடர்பான மனுக்களை இரண்டு பிரதிகளில் வரும், ஜூன், 5க்குள் மாவட்ட கலெக்டருக்கு அஞ்சல் வழியாகவும், நேரிலும் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது-.