/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விபத்து பகுதியாகும் நாச்சிக்குப்பம் கூட்ரோடு வேகத்தடை இல்லையென மக்கள் குற்றச்சாட்டு

ADDED : நவ 07, 2025 12:47 AM
கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் கூட்ரோடு அருகே தொடர்விபத்துகள் நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராடியும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவில்லையென, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நாச்சிக்குப்பம் கூட் ரோடு அமைந்துள்ளது. இது தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களை பிரிக்கும் சாலைகள் அமைந்த பகுதி. இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு நடுநிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நுாலகம், பஞ்., அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன.
இப்பகுதியிலும், வேப்பனஹள்ளியிலிருந்து பேரிகை செல்லும் சாலையிலும் தினமும் விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது. கடந்த மாதத்தில் டூவீலர் விபத்துகளில் நால்வர் பலியான நிலையில் கடந்த, 9ல், 5 மாத பெண் குழந்தையின் தாயான சிவசத்யா, 25, என்பவர் நாச்சிக்குப்பம் கூட்ரோட்டில் சாலையை கடக்க முயன்றபோது, தனியார் பஸ் மோதி பலியானார். தொடர் விபத்தை தடுக்க, அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கூறி அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளித்தும், சாலைமறியலில் ஈடுபட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, நெடுஞ்சாலைத்துறையினரோ நடவடிக்கை எடுக்கவில்லை என, மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.