/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
/
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்தாண்டு போதிய மழை இல்லை; நடப்பாண்டும் இதுவரை மழை பெய்யாததால், கடும் வறட்சி நிலவுகிறது. மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். சில இடங்களில் தண்ணீர் இல்லாமல், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு கூட மக்கள் சென்றனர்.
இந்நிலையில், ஓசூர் நகரில் நேற்று மதிய நேரத்தில் மழை பெய்வது போல் குளிர் காற்று வீசியது. வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், மாலை வரை மக்கள் எதிர்பார்த்தும் மழை பெய்யவில்லை. ஆனால், ஓசூர் அருகே உள்ள குமுதேப்பள்ளி, அதியமான் கல்லுாரி, பத்தலப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில், நேற்று மதியம், 3:30 மணி முதல், 3:45 மணி வரை, 15 நிமிடம் மிதமான அளவில் மழை பெய்தது. தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய நீரில், வாகனங்கள் சென்றன. திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.