/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தலில் மக்கள் தான் எங்கள் கூட்டணி கி.கிரி அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்

ADDED : ஏப் 17, 2024 12:28 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜே.காருப்பள்ளி, கோட்டைவாசல், அண்ணா நகர், தேன்கனிக்கோட்டை, சந்தனப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில், கிருஷ்ணகிரி லோக்சபா, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் ஆதரவு திரட்டினர்.
தொடர்ந்து, வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது: மக்கள் தான் எங்கள் கூட்டணி; அவர்களை நம்பி தான் களத்தில் உள்ளோம். அ.தி.மு.க., வலுவான கட்சி. மக்களுக்காக போராடும் கட்சி. இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவது உறுதி. மக்களுக்கு நல்லது செய்ய நாங்கள் போட்டியிடுகிறோம். காங்., கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு பின், காணாமல் போய் விடுவார்.
ஆனால், அ.தி.மு.க., அப்படியல்ல. மக்களுடன் தோளுக்கு, தோளாக நிற்கும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த தடை விதிக்கின்றனர். அவர்களை நாம் இத்தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். யானைகளால், மனிதர்கள் தாக்கப்படுவதை தடுக்க, 150 கி.மீ., துாரத்திற்கு சோலார் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு என்னென்ன தேவை என்பது எனக்கு தெரியும். அதை அனைத்தையும் நிறைவேற்றி கொடுப்பேன். இவ்வாறு, அவர் பேசினார்.