/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
5 மாதமாக சுற்றித்திரியும் சிறுத்தை ஆட்டை கொன்றதால் மக்கள் பீதி
/
5 மாதமாக சுற்றித்திரியும் சிறுத்தை ஆட்டை கொன்றதால் மக்கள் பீதி
5 மாதமாக சுற்றித்திரியும் சிறுத்தை ஆட்டை கொன்றதால் மக்கள் பீதி
5 மாதமாக சுற்றித்திரியும் சிறுத்தை ஆட்டை கொன்றதால் மக்கள் பீதி
ADDED : மார் 02, 2024 03:20 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, ஐந்து மாதமாக கூண்டில் சிக்காமல் உலா வரும் சிறுத்தை, முன்னாள் பஞ்., தலைவரின் ஆட்டை கடித்து கொன்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, தண்டரை பஞ்.,க்கு உட்பட்ட சனத்குமார் காட்டாறு பகுதி, இஸ்மாம்பூர், அடவிசாமிபுரம் பகுதிகளில் சிறுத்தை ஒன்று
சுற்றித்திரிகிறது.
கடந்த செப்., 28ல், சனத்குமார் நதி அருகே ஆடு ஒன்றை சிறுத்தை தாக்கி கொன்றது. தனியார் ரிசார்ட்டை ஒட்டியுள்ள லே அவுட் பகுதியில், ஓய்வு பெற்ற டாக்டரின் நாயை சிறுத்தை கடித்து கொன்றது. இதையடுத்து, வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை வைத்தனர்.
இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால், சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைகலபுரம், தண்டரை, இஸ்லாம்பூர், பென்னங்கூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐந்து மாதங்கள் ஆன போதும், சிறுத்தை இதுவரை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கவில்லை.
நேற்று முன்தினம், அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அடவிசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த, தண்டரை பஞ்., முன்னாள் தலைவர் துரைசாமி என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, ஆட்டை விட்டு சிறுத்தை தப்பி சென்றது.
தேன்கனிக்கோட்டை வனத்துறையினரால், சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

