sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி

/

கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி

கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி

கால்நடைகளை கடித்து குதறும் தெருநாய்களால் மக்கள் அதிர்ச்சி


ADDED : ஜூன் 02, 2025 03:28 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, வீட்டில் வளர்க்கும் கால்நடை-களை தெருநாய்கள் கடித்து குதறி வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பென்-னங்கூர் கிராமத்தில், 3 மாட்டிறைச்சி கடைகள் உள்ளன. இங்கு வீணாகும் மாட்டிறைச்சிகள் தெருநாய்களுக்கு உணவாக சாலை-யோரம் வீசப்படுகின்றன. அவற்றை சாப்பிடுவதற்காக, பென்-னங்கூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்தி-ரிகின்றன.இவை, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சிறுவர் மற்றும் கால்நடைகளை கடித்து குதறி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், பென்னங்கூரை சேர்ந்த கண்ணம்மா என்பவரது கன்றுக்-குட்டி, கோபால், கிருஷ்ணாரெட்டி, அசோக் ரெட்டி மற்றும் லட்-சுமணன் ஆகியோரது வீடுகளில் வளர்க்கும் ஆடுகள், கோழி-களை கடித்து குதறியுள்ளன.

இதில் ஆடுகள் மற்றும் கன்றுக்குட்டி பலத்த காயமடைந்தன. மாட்டிறைச்சி கிடைக்காத நேரங்களில், கால்நடைகளை தாக்கு-வதை தெருநாய்கள் வழக்கமாக கொண்டுள்ளன. அதனால், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள், பொது-மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெருநாய்கள் தொல்லையால் கால்நடைகளை வளர்க்கவே அச்சப்படுகின்றனர்.

எனவே பஞ்., நிர்வாகம், தெருநாய்களை பிடித்து, அவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து, அதன் பெருக்கத்தை குறைக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us