/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்
/
இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்
இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்
இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மக்கள்
ADDED : செப் 30, 2025 01:43 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட சுதந்திர பொது தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் அயூப்ஜான், செயலாளர் திம்மராயன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை இலவச வீட்டுமனை கேட்டு, கோரிக்கை மனு வழங்க வந்தனர். பல ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டும் கொடுக்காததால், தங்களது ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை, சப்-கலெக்டரிடம் ஒப்படைக்க கொண்டு வந்திருந்தனர். இதையறிந்த சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, தலைவர் அயூப்ஜான் மற்றும் நிர்வாகிகளை அழைத்து பேசி, வருவாய்த்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனால், மனுவை மட்டும் பொதுமக்கள் வழங்கினர்.
அது தொடர்பாக, சங்கத்தலைவர் அயூப்ஜான் கூறியதாவது: ஓசூரில், 1,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெயின்டிங், வெல்டர், தள்ளு
வண்டி, கூலி வேலை செய்து வருகின்றனர். இதில், 650க்கும் மேற்பட்டோர் சொந்த வீடு இல்லாமல் உள்ளனர். மாதந்தோறும், 5,000 ரூபாய்க்கு மேல் வாடகை செலுத்த வேண்டியுள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால், போதை பழக்கத்திற்கு அடிமையாகி, இளைஞர்கள் வாழ்க்கையை தொலைக்கின்றனர். எனவே அரசு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதுடன், பொது தொழிலாளர்களான எங்களுக்கு, ஓசூரில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.