/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் மீட்டர் வழங்குவதில் தாமதம் என மக்கள் புகார்
/
மின் மீட்டர் வழங்குவதில் தாமதம் என மக்கள் புகார்
ADDED : செப் 17, 2024 07:48 AM
கிருஷ்ணகிரி: மின்வாரிய அலுவலகங்களில், மீட்டர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, புதிய இணைப்பு வழங்க தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள், புதிய மின் இணைப்பு வேண்டி, ஆன்லைன் மூலம் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை, புதிய மின் மீட்டர் கிடைக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 15 நாட்களுக்கு மேலாக, மின் மீட்டர் வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் முறையிட்டால், தமிழக அரசு புதிய மின் மீட்டர்களை வழங்கினால் தான், புதிய மின் இணைப்பை வழங்க முடியும் என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
இதனால், மின் இணைப்பு வேண்டி பதிவு செய்தவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மின் இணைப்பு பெற, இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது. கூடுதலாக பணம் கட்டினாலும், மீட்டர் கொடுப்பதில்லை. எனவே, மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு கேட்டு பதிவு செய்தவர்களுக்கு, உடனடியாக மின் மீட்டரை வழங்க வேண்டும்' என்றனர்.