/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மணல்பள்ளத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்
/
மணல்பள்ளத்தில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்
ADDED : அக் 01, 2024 01:23 AM
மணல்பள்ளத்தில் தொடரும்
விபத்தால் மக்கள் அச்சம்
ஊத்தங்கரை, அக். 1-
பெங்களூருவை சேர்ந்தவர் கஜேந்திரா, 40. இவர் ஈச்சர் வாகனத்தில் பெங்களூருவில் இருந்து, 10 டன் தக்காளி ஏற்றிக்கொண்டு, செங்கம் நோக்கி சென்றார். நேற்று அதிகாலை, ஊத்தங்கரை அருகே, சாமல்பட்டி அடுத்த மணல் பள்ளம் என்ற இடத்தில், பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலை முழுவதும் தக்காளி சிதறியது. வாகனத்தின் பின்பக்க, 2 டயர்களும் தனியாக கழன்று, அருகிலுள்ள விவசாய நிலத்தில் விழுந்தன.
கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரை, இரவில் சென்று வரும் வாகனங்கள் தடுப்பு சுவரில் மோதி அடிக்கடி விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது.