/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராமங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அச்சத்தில் பொதுமக்கள்
/
கிராமங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அச்சத்தில் பொதுமக்கள்
கிராமங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அச்சத்தில் பொதுமக்கள்
கிராமங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : மார் 16, 2024 09:29 AM
ஓசூர்: கிராமங்களில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், ஜவளகிரி வனச்சரக பகுதியில் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து, ராகி, தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, ஜவளகிரி, அகலக்கோட்டை, மேடுமுத்துக்கோட்டை ஆகிய கிராமங்களில் சில நாட்களாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும், இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் ஒற்றை யானை, ரோஜா உள்ளிட்ட மலர் நர்சரி தோட்டங்கள், விவசாய விளை பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்யும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்களை, தாக்கும் வகையில் ஒற்றை யானை விரட்டி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.