/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து மக்்கள் போராட்டம்
/
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து மக்்கள் போராட்டம்
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து மக்்கள் போராட்டம்
ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து மக்்கள் போராட்டம்
ADDED : மே 06, 2025 01:43 AM
ஓமலுார்:
கருப்பூர் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, கருப்பூர் பகுதியினர் ஒன்று திரண்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே கருப்பூரில், 60 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இது கருப்பூர் டவுன் பஞ்., கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியில் ஏற்கனவே விவசாயிகளுக்கு மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி டிப்பர், டிராக்டரில் இரவு பகலாக மண் அள்ளப்பட்டது.
அதற்கான பர்மிட் முடிந்த நிலையில், தற்போது சேலம்-ஓமலுார் தேசிய நெடுஞ்
சாலையில், மாமாங்கத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைந்து பணியை முடிக்க கருப்பூர் ஏரியில் மண் அள்ளப்பட்டது. குறிப்பிட்ட அளவை விட, அதிக பரப்பில் மிக ஆழமாக நுரம்பு மண் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் ஏரியின் பல இடங்கள் கிணறு போல காணப்படுகிறது. அருகில் இருந்த தென்னை, பனை மரங்கள் அந்தரத்தில் தொங்குவது போல் உள்ளது.
மண் அள்ளுவதை தடுக்க கோரி, பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று
அப்பகுதி மக்கள் மற்றும் முன்னாள் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., வெற்றிவேல், த.மா.கா., சுசீந்திரகுமார், பா.ம.க., சதாசிவம், பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கிராம மக்கள் ஏரியில் குவிந்தனர்.
ஏரியில் மண் அள்ளக்கூடாது; ஏரியில் குளிக்க வரும் போது ஆழமான பள்ளங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடும். எனவே ஏரியை சமன் செய்ய வேண்டும், ஏரியை பாதுகாக்க சுற்றியும் மரக்கன்றுகளை நடவேண்டும், எவ்வளவு மண் அள்ளப்பட்டுள்ளது என்பதை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். ஏரியில் மண் அள்ளியதற்கான தொகையை, தனியார் ஒப்பந்ததாரர் கருப்பூர் டவுன் பஞ்., அலுவலகத்துக்கு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏரி முன் போராட்டம் நடத்தினர்.
கருப்பூர் போலீசார், வருவாய்த்துறை, கருப்பூர் டவுன் பஞ்.,செயல்அலுவலர் மேகநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் செயல் அலுவலர் மேகநாதன் கூறுகையில், ''இனிமேல், ஏரியில் மண் அள்ள யாருக்கும் அனுமதி கிடையாது என அறிவிப்பு பலகை வைக்கப்படும்,'' என்றார்.
மீண்டும் மண் அள்ளப் பட்டால், வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என தெரிவித்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
********************