/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உயிரிழந்த கோவில் காளையை சடங்கு செய்து புதைத்த மக்கள்
/
உயிரிழந்த கோவில் காளையை சடங்கு செய்து புதைத்த மக்கள்
உயிரிழந்த கோவில் காளையை சடங்கு செய்து புதைத்த மக்கள்
உயிரிழந்த கோவில் காளையை சடங்கு செய்து புதைத்த மக்கள்
ADDED : செப் 10, 2024 07:41 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஒரு காளை மாடு, பல ஆண்டு-களாக சுற்றி வந்தது. ஜல்லிக்கட்டு காளை போன்று தோற்றமளித்-தாலும், யாரையும் துன்புறுத்தாமல், சாந்தமாக இருந்தது. இதனால் கோவில் காளையாக பாவித்து, உணவு மற்றும் தீவனத்தை அப்பகுதி மக்கள் வழங்கி வந்தனர். கடை முன் நின்-றாலும், விரட்டி விடாமல் உடனடியாக உணவு வழங்கினர். சில நாட்களாக உடல்நிலை பாதித்திருந்த காளை, ஓசூர் தாலுகா அலு-வலக சாலையில், சுருண்டு விழுந்து நேற்று காலை உயிரிழந்தது.
தேர்ப்பேட்டை பகுதி இளைஞர்கள், தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் சக்திவேல், பகுதி செயலாளர் ராமு மற்றும் ஓசூர் பகுதி வியாபாரிகள், காளைக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வழிபட்டனர். பின், மேள, தாளம் முழங்க சரக்கு வாக-னத்தில் ஏற்றி தேர்ப்பேட்டை தெப்பக்குளம் அருகே கொண்டு சென்று, ஹிந்து முறைப்படி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.