/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இடம் பற்றாக்குறையால் மக்கள் அவதி
/
அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இடம் பற்றாக்குறையால் மக்கள் அவதி
அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இடம் பற்றாக்குறையால் மக்கள் அவதி
அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் இடம் பற்றாக்குறையால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 30, 2025 04:13 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, 31வது அகில இந்திய மாங்-கனி கண்காட்சி கடந்த, 21ல் துவங்கியது.
இங்கு, 50க்கும் மேற்-பட்ட அரசுத்துறை அரங்குகளும், 80க்கும் மேற்பட்ட தனியார் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தினமும், 10,000 பேர் வரை வந்து செல்லும் நிலையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், 50,000 முதல் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால், போதிய இடவசதியின்றி மாங்கனி கண்-காட்சிக்கு வரும் பொதுமக்கள் கடந்த, 2 நாட்களாக மிகவும் சிர-மத்திற்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம், 70,000 பேருக்கு மேல் கண்காட்சிக்கு வந்-ததால், 7:00 மணிக்கு மேல், உள்ளே செல்ல வழியின்றி நுழைவா-யிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், 'பொது-மக்கள் யாரும் உள்ளே வர வேண்டாம், உள்ளே இடம் இல்லை, தயவு செய்து யாரும் வராதீர்கள்' என்று மைக்கில் அறிவிக்கப்பட்-டது. இதனால் பலர் உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கண்காட்சி மாலை, 4:00 மணிக்கு துவங்குவதால், பொதுமக்-களின் நலன் கருதி போலீசார், டோல்கேட் அருகில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள யூ டர்ன் வளைவை பேரிகார்டு வைத்து அடைத்து விடுகின்றனர். அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால், அதை சரிசெய்ய போலீசார், போராடி வருகின்றனர். ஒருபுறம் நகரிலிருந்து கண்காட்சிக்கு வரும் மக்களை மாங்கனி கண்காட்சிக்கு அனுப்பவும், டோல்கேட் வரை வரும் வாகனங்-களை திருப்பி அனுப்பவும், தினமும் போலீசார் போராடி வருகின்-றனர்.