/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி
/
நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி
நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி
நிலவாரப்பட்டியில் மின்வெட்டுதிருவிழாவில் மக்கள் அவதி
ADDED : ஏப் 17, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில், மாரியம்மன் திருவிழா நடந்து வருகிறது. அங்கு தொடர்ந்து,4 நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து நிலவாரப்பட்டி மக்கள் கூறியதாவது: நேற்று மாலை, 5:30 மணிக்கு ஏற்பட்ட மின் தடை இரவு, 9:30 மணி வரையிலும் சரி செய்யப்படவில்லை. தாசநாயக்கன்பட்டி மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், சிறிது நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்ற பதிலையே தெரிவிக்கின்றனர். திருவிழா நாட்களில் ஏற்படும் மின்தடையால், விருந்தினர்கள் இடையே சங்கடம் ஏற்படுகிறது.
4 நாட்களாக, சமையல் செய்யும் நேரம், சாப்பிடும்போது மின்தடை ஏற்படுகிறது. 2 மணி நேரத்துக்கு பின் வினியோகம் செய்கின்றனர். தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

