/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் குளோரின் காஸ் கசிவு; மூச்சுத்திணறலால் மக்கள் அவதி
/
ஓசூரில் குளோரின் காஸ் கசிவு; மூச்சுத்திணறலால் மக்கள் அவதி
ஓசூரில் குளோரின் காஸ் கசிவு; மூச்சுத்திணறலால் மக்கள் அவதி
ஓசூரில் குளோரின் காஸ் கசிவு; மூச்சுத்திணறலால் மக்கள் அவதி
ADDED : ஜன 26, 2025 07:37 AM

ஓசூர்: ஓசூரில், குளோரின் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி பாதிப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 14வது வார்டு ஈஸ்வர் நகரில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை ஏற்றும்போதே, அதை சுத்தம் செய்ய, குளோரின் காஸ் அதனுடன் கலக்கப்படுகிறது.
அதற்காக, 100 கிலோ எடை குளோரின் காஸ் சிலிண்டரை வாங்கி மாநகராட்சி நிர்வாகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் வைத்திருந்தது.
நீண்ட நாட்களாக வைத்திருந்த சிலிண்டரின் அடியில் துருப்பிடித்து ஓட்டை விழுந்தது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, அதிலிருந்து குளோரின் காஸ் கசிந்தது. அதை சரிசெய்ய, நீரில் நனைத்த சாக்கை சிலிண்டர் மீது மாநகராட்சி ஊழியர்கள் போட்டனர்.
இருப்பினும் குளோரின் காஸ் கசிந்ததால், ஈஸ்வர் நகர் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஓசூர் தீயணைப்பு துறையினர் நீர் நிரம்பிய பிளாஸ்டிக் டிரம்மில் சிலிண்டரை போட்டதால், காஸ் பரவாமல் தடுக்கப்பட்டது.
ஓசூர், காமராஜ் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், 2022 அக்., 14ல் குடிநீரில் குளோரின் காஸ் கலந்தபோது ஏற்பட்ட கசிவால், அருகிலிருந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ - மாணவியர், 67 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

