/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கேட்டு மனு
/
60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கேட்டு மனு
60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கேட்டு மனு
60 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கேட்டு மனு
ADDED : ஆக 05, 2025 01:35 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 13வது வார்டு மக்கள், ம.தி.மு.க., முன்னாள் துணை செயலாளர் அசோக்குமார் ராவ் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 13வது வார்டு பகுதியில், 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். இப்பகுதியில், 50 முதல், 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வந்தால், அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், 60 ஆண்டுகளாகியும் எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.