ADDED : நவ 12, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, நவ. 12-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 288 மனுக்களை வழங்கினர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.