/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
/
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
ADDED : ஜூலை 22, 2025 02:04 AM
ஒகேனக்கல், ஒகேனக்கல், காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 20,000 கன அடியாக சரிந்ததால், பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், குளிக்க தடை தொடர்கிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அங்குள்ள அணைகள் நிரம்பி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரியாற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 43,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 24,000 கன அடியாக சரிந்தது.
அது மாலை, 5:00 மணிக்கு, 20,000 கன அடியாக மேலும் குறைந்தது. நீர்வரத்து சரிவால் நேற்று காலை முதல், ஆற்றில் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, 2வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்கிறது.