/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்குவாரி குத்தகை எதிர்ப்பு தெரிவித்து மனு
/
கல்குவாரி குத்தகை எதிர்ப்பு தெரிவித்து மனு
ADDED : ஜூலை 15, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட, த.வா.க., பொறுப்பாளர் குமார் மற்றும் பொதுமக்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை அடுத்த நாகமங்கலத்தில் கல்லாங்குத்து அரசு புறம்போக்கு நிலம், அதை ஒட்டியுள்ள இயற்கை எழில் மிகுந்த மலை வளங்களை அழித்து கல்குவாரிகளுக்கு குத்தகை விடும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்பகுதிகளில் பல மலைகளை குடைந்து கனிம வளங்களை கொள்ளையடித்து உள்ளனர்.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு, விவசாய நிலங்களுக்கு கால்வாயில் வரும் தண்ணீர் இல்லாமல் போனது, உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கனிம வளங்களை வெட்டி எடுக்கும்போது வெளியேறும் துகள்கள் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் காற்றில் கலந்து புற்றுநோய், சைனஸ், ஆஸ்துமா என பல்வேறு நோய்களுக்கும் இப்பகுதியில் மக்கள் ஆளாகி உள்ளனர்.
மேலும், 1,000 அடி தோண்டினாலும் தண்ணீர் இல்லாத அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. புதிதாக கல்குவாரி குத்தகை விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து மனு அளித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ கொலை மிரட்டல் விடுக்கும் கல்குவாரி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.