/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.3.91 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
/
ரூ.3.91 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ரூ.3.91 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ரூ.3.91 லட்சம் குட்கா கடத்தல் டிரைவர் உட்பட இருவர் கைது
ADDED : ஜூலை 15, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடகா மதுபான பாக்கெட்டுகளை, கேரளாவிற்கு கடத்துவது தெரிந்தது.
இதனால், வாகனத்தை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த பைசல், 44, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.91 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 326 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 3,600 ரூபாய் மதிப்புள்ள, 48 பாக்கெட் கர்நாடகா மதுபானம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.