/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டுமனை, பட்டா கோரி ஊத்தங்கரை மக்கள் மனு
/
வீட்டுமனை, பட்டா கோரி ஊத்தங்கரை மக்கள் மனு
ADDED : ஜூலை 02, 2024 06:15 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரிய தள்ளப்-பாடி, ரெட்டிவலசை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பெரியதள்ளப்பாடி, ரெட்டிவலசை உள்ளிட்ட பகுதிகளில், வசிக்கும், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் கூலி வேலை செய்து வருகிறோம். இதில் பலர் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில், 10க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலை உள்ளது. எங்கள் குடும்பத்தினருக்கு வேறு சொத்தோ, நிலமோ இல்லை. எனவே, எங்களுக்கு கல்லாங்குத்து அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி, வீட்டு-மனை, பட்டாவுடன் இலவச வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்-வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.