/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீர் கால்வாய் மூடல் நடவடிக்கை கோரி மனு
/
கழிவுநீர் கால்வாய் மூடல் நடவடிக்கை கோரி மனு
ADDED : ஜூன் 17, 2025 01:47 AM
கிருஷ்ணகிரி,
வேப்பனஹள்ளி, ஈதாக தெருவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த, கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
வேப்பனஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் ஈத்கா தெருவில், 200 குடும்பங்களை சேர்ந்த, 750க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். எங்கள் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய், நமாஸ் தெரு வழியாக பூதிபட்லு செல்லும் சாலையில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது கழிவுநீர் கால்வாய் செல்லும் இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, கால்வாயை மூடியுள்ளனர்.
இதனால் கழிவுநீர் சாலைகளில் வெளியேறியும், வீடுகளுக்குள் தேங்கியும் துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாகவே பள்ளி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். இது குறித்து விசாரித்து கழிவுநீர் கால்வாயை தடுத்துள்ள நபர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.