/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெருநாய்களுக்கு கருத்தடை கலெக்டரிடம் கோரிக்கை மனு
/
தெருநாய்களுக்கு கருத்தடை கலெக்டரிடம் கோரிக்கை மனு
ADDED : ஜூலை 15, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகிறது. அவை, டூவீலரில் செல்வோரை துரத்துவதும், கடிப்பதுமாக உள்ளது.
குறிப்பாக நகரப்பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவதால், பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. ஓசூர் மாநகராட்சியில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் நாய் கடித்து ஒரு வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தலையில், 40 தையல்கள் போடப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி நகரப் பகுதியிலும் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தி, அவற்றிற்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.