/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாய் தொல்லையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
/
நாய் தொல்லையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
ADDED : நவ 26, 2024 01:40 AM
நாய் தொல்லையை கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி, நவ. 26-
கிருஷ்ணகிரியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும், கலெக்டரிடம் மனு அளித்ததாக, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் நாய்கள் அதிகரித்துள்ளன. தெருக்கள் தோறும் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிவதாகவும், பள்ளி குழந்தைகள், வாகனங்களில் செல்வோரை கடிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், அதிகரிக்கும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், நாய்களுக்கு கருத்தடை செய்ய, அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். கலெக்டர் அறிவுறுத்தல் படி, நகராட்சியில் விரைவில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் வகையில், பயிற்சி பெற்றவர்களை கொண்டு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கண்காணிப்புக்கு பிறகு, நாய்களை அதே இடத்தில் விடும் திட்டமும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் நவாப், பொருளாளர் கனல் சுப்பிரமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.