/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டா கேட்டு சூளகிரி தாசில்தாரிடம் மனு
/
பட்டா கேட்டு சூளகிரி தாசில்தாரிடம் மனு
ADDED : அக் 04, 2025 12:50 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தோரிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட உங்கட்டி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசிக்கின்றனர். இதில், 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பலமுறை வீட்டுமனை பட்டா கேட்டும் வருவாய்த்துறை வழங்கவில்லை. இந்நிலையில், வீட்டுமனை பட்டா கேட்டு சூளகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று சென்ற, 50க்கும் மேற்பட்டோர், தாசில்தார் ரமேஷ்பாபுவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஒரே வீட்டில், 3 குடும்பங்களாக வசிப்பவர்களுக்கு, வேறு இடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் ரமேஷ்பாபு, ஆட்சேபனைக்குரிய நிலமாக இல்லாமல் இருந்தால், நிச்சயமாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.