/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெட்ரோல் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
/
பெட்ரோல் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து
ADDED : ஜூலை 23, 2025 01:52 AM
கிருஷ்ணகிரி, சென்னையில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. தஞ்சாவூர் மாவட்டம் ரங்கநாதபுரத்தை பாலமுருகன், 34, என்பவர் லாரியை ஓட்டி வந்தார். பெட்ரோல் லோடை இறக்கி விட்டு நேற்று மீண்டும் சென்னை திரும்பினார்.
காலை, 9:00 மணியளவில், பர்கூர் அருகே, கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுபாட்டை இழந்த லாரி, சாலையோரம் உள்ள இறக்கத்தில் கவிழ்ந்தது. லாரி டிரைவர் பாலமுருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக லாரியில் பெட்ரோல் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.