ADDED : டிச 28, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மாவட்ட அலுவலகம் கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலை ஜீவா மருத்துவமனை எதிரில் மேற்கு இணைப்பு சாலையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் தற்போது கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் முதல் மாடிக்கு
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பி.எப்., அலுவலகத்தை வருங்கால வைப்புநிதி கமிஷனர் ஹிமான்சு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமலாக்க அதிகா-ரிகள் ராஜூ, கல்பனா மற்றும் பிரிவு மேற்பார்வையாளர் குப்பு-சாமி உள்பட பலர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்-பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களின் வருங்கால வைப்பு நிதியைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற இந்த அலுவலகத்தை அணுகலாம்.

