/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான பைலட் தினம் கொண்டாட்டம்
/
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான பைலட் தினம் கொண்டாட்டம்
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான பைலட் தினம் கொண்டாட்டம்
ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான பைலட் தினம் கொண்டாட்டம்
ADDED : மே 31, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், இந்திய அளவிலான, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கான பைலட் தினம் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பணிபுரிந்து வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களாக மகேந்திரன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு மாவட்ட இணை இயக்குனர் ஞானமீனாட்சி, சிறந்த ஓட்டுனர்களுக்கான விருதை வழங்கி பாராட்டியதுடன், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ரஞ்சித் வாழ்த்தி பேசினார். இதை தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பைலட் தினத்தை கொண்டாடினர்.