/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைலட் இல்லா மெட்ரோ ரயில்; பெங்களூருக்கு வந்த பெட்டிகள்
/
பைலட் இல்லா மெட்ரோ ரயில்; பெங்களூருக்கு வந்த பெட்டிகள்
பைலட் இல்லா மெட்ரோ ரயில்; பெங்களூருக்கு வந்த பெட்டிகள்
பைலட் இல்லா மெட்ரோ ரயில்; பெங்களூருக்கு வந்த பெட்டிகள்
ADDED : பிப் 18, 2024 10:55 AM
ஓசூர்: பெங்களூரில் பைலட் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான பெட்டிகள் வந்தன.
நாட்டிலேயே முதல் முறையாக, கர்நாடகா மாநிலத்தில் பைலட் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக சீனாவிலிருந்து கப்பலில், சென்னை துறைமுகத்துக்கு ஆறு ரயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து லாரிகள் மூலம், கர்நாடக மாநில எல்லை ஹெப்பகோடி மெட்ரோ ரயில் டிப்போவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தன.
முதற்கட்டமாக கர்நாடகா மாநிலம், பொம்மசந்திரா - ஆர்.வி., சாலை இடையே, 18.81 கி.மீ., துாரத்திற்கு இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, 95 சதவீத பணி முடிந்து விட்டது. பணிகள் முழுமை பெற்றவுடன், சோதனை ஓட்டம் நடத்தப்படும். வரும், ஆக., மாதம் சோதனை ஓட்டம் நடந்து, டிசம்பர் மாதவாக்கில் ரயில் சேவை துவங்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான வரவேற்பை பொறுத்து, விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அதேசமயம் இந்த ரயில் சேவையை, ஓசூர் வரை நீட்டிக்க, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.