/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை பணியால் குழாய் உடைப்பு: குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
/
சாலை பணியால் குழாய் உடைப்பு: குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
சாலை பணியால் குழாய் உடைப்பு: குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
சாலை பணியால் குழாய் உடைப்பு: குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
ADDED : செப் 21, 2024 07:24 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள, 3 வது வார்டு அலமேலு புரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு சாமியாபுரம் கூட்ரோடு, சேலம் -அரூர் மெயின் ரோடு வழியாக குழாய் அமைக்கப்பட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கபட்டு
வருகிறது. தற்போது, ஏ.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை, நான்கு வழி சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. அச்சாலை பணியின் போது அலமேலுபுரம் கிராமத்திற்கு செல்லும் ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. கடந்த சில
நாட்களாக அலமேலுபுரம் கிராமத்துக்கு குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், குடிநீர் இன்றி மக்கள் கடும் அவதி அடைந்து
வந்தனர். பேரூராட்சி நிர்வாகம் ஒகேனக்கல் குடிநீர் திட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் குடிநீர் குழாய் உடைப்பு
சரிசெய்ய வலியுறுத்தி வந்தனர். சரி செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், நேற்று காலை, 10:20 மணிக்கு காலி
குடங்களுடன், கருப்பு கொடியுடன் பெண்கள், பொதுமக்கள் அலமேலு புரத்தில், அரூர் -சேலம் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி, பேரூராட்சி தலைவர் மாரி, வி.ஏ.ஓ., நித்யா, ஒகேனக்கல் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்
மீனா, மேற்பார்வையாளர் பழனி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்கு பின்
காலை, 10:50 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக உடைந்த குடிநீர் குழாய்
சரி செய்யப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு குடிநீர் வழங்கப்பட்டது.