/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீதிமன்ற வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடல்
/
நீதிமன்ற வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடல்
ADDED : ஏப் 27, 2025 03:55 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கோர்ட் வளாகத்தில் நேற்று காலை, 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், போச்சம்-பள்ளி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் தலைமை வகித்தார். நீதிபதிகள் தாமோதரன், கோகுல
கிருஷ்ணன், ஜெயந்தி, ஸ்ரீவஸ்தவா, அமர்ஆனந்த், திருமலை, சண்முகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி லதா, மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்து, மரக்கன்றுகள் நம் சந்ததிக்கும், எதிர்கால சந்ததிக்கும் அளிக்கும் பலன்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார். இதில் போச்சம்பள்ளி வக்கீல் சங்கத்தலைவர் ஜெய-பாலன், செயலாளர் ரகு, பொருளாளர் கோபிநாத் மற்றும் புக-ழேந்தி, கபிலன் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட வக்கீல்களும், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பர்கூர் பி.டி.ஓ., செந்தில், வனசரகர் மகேந்திரன் மற்றும் கோர்ட் அலுவலக ஊழி-யர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

