/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் மீது பஸ் மோதியதில் பிளஸ் 1 மாணவர் சாவு
/
பைக் மீது பஸ் மோதியதில் பிளஸ் 1 மாணவர் சாவு
ADDED : அக் 09, 2025 03:02 AM
ஓசூர்:தனியார் பள்ளி பஸ் மோதியதில், பிளஸ் 1 மாணவர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நல்லுாரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் இந்திரேஷ், 18. அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, நல்லுார் - ஓசூர் சாலையில், 'பல்சர்' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றார்.
சித்தனப்பள்ளியில் உள்ள பீஸ் வேலி தனியார் லே - அவுட் அருகே சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த, சித்தார்த் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பஸ், பைக் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட மாணவர் இந்திரேஷ் படுகாயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். நல்லுார் போலீசார், ஓசூர் அலச நத்தம் பகுதியை சேர்ந்த டிரைவர் பாப்பையா, 51, என்பவர், தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.